காஷ்மீர் மாநில அந்தஸ்து கிடைக்கும்வரை நாடாளுமன்றம் முடங்கும்.. வீதிதோறும் போராட்டம்- ராகுல் வார்னிங்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக "இந்தியா" தமது முழு பலத்தையும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தும்; ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்துக்காக வீதிகள் தோறும் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 18-ந் தேதி முதல் கட்ட தேர்தலும் இன்று 2-வது கட்ட தேர்தலும் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் கடைசி மற்றும் இறுதி கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்ட வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜம்முவில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும். சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும். அப்படி மாநில அந்தஸ்தை தர மறுத்தால் இந்தியா கூட்டணி தமது முழு பலத்தையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தும். ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து கோரி வீதிகள் தோறும் போராட்டங்கள் நடைபெறும்.
நாடு விடுதலைக்குப் பின்னர் யூனியன் பிரதேசங்கள்தான் மாநிலங்களாக அந்தஸ்து பெற்றிருக்கின்றன.ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் உருவானது. பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் உருவானது; மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் உருவானது.
ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாக கூறப்பட்ட கொடுமை ஜம்மு காஷ்மீரில்தான் நிகழ்ந்தது. ஜம்மு காஷ்மீரை 2- ஆகப் பிரித்து இந்த மக்களுக்கு மிகப் பெரும் அநீதியை இழைத்துவிட்டது பாஜக. அப்படியான ஒரு துயரம் நிகழ்ந்திருக்கக் கூடாது.
ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாஜக பறித்துவிட்டது. ஜம்மு காஷ்மீரில் இப்போதும் சொந்த மண்ணின் மக்களால் ஆளப்படவில்லை. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மண்ணை ஆண்டு கொண்டிருக்கின்றனர். ஆகையால்தான் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் உரிமைகளை நாங்கள் மீட்டெடுப்போம் என உறுதியளிக்கிறோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications