வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே ட்விஸ்ட்.. காஷ்மீரில் பாஜகவுக்கு 5 எம்எல்ஏக்கள்.. அது எப்படி தெரியுமா?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் தான் சட்டசபைத் தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. அங்கு வரும் அக். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே, அங்கு பாஜக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட 8 பேர் எம்எல்ஏ ஆகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 3 கட்டமாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. பல பகுதிகளில் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்தனர்.

காஷ்மீர் தேர்தல்: வரும் அக். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காஷ்மீரில் மொத்தம் 95 இடங்கள் உள்ள நிலையில், 48 இடங்களில் வெல்லும் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும். இதற்கிடையே அங்கு வாக்கு எண்ணிக்கை நடக்கும் முன்பே பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் 5 பேர் எம்எல்ஏவாக ஆகியுள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதாவது ஜம்மு காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில், துணை நிலை ஆளுநருக்கே அதிகம் . ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019இன் கீழ் காஷ்மீரில் ஐந்து எம்எல்ஏக்களை துணை நிலை ஆளுநர் நியமிப்பார். உள் துறை அமைச்சகம் 5 பேரைப் பரிந்துரை செய்த நிலையில், அதற்கு இப்போது துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
5 எம்எல்ஏக்கள்: இதன் மூலம் பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட 5 பேர் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளனர். இருப்பினும், இதற்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவர் ரவீந்தர் சர்மா கூறுகையில், "தேர்தல் முடிவுக்கு முன்னரே லெப்டினன்ட் கவர்னர் ஐந்து எம்எல்ஏக்களை நியமனம் செய்ததை ஏற்க முடியாது. இது ஜனநாயகம், மக்கள் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகள் மீதான தாக்குதலாகும். வாக்கு எண்ணிக்கை முடிந்து, மாநிலத்தில் ஆட்சி அமைந்த பிறகே எம்எல்ஏக்களை நியமிக்க வேண்டும்.
இதை எதிர்த்து காங்கிரஸ் நிச்சயம் போராடும். மக்களை சந்தித்துத் தேர்தலில் வெல்ல முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட பாஜக, குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தில் அமர முயல்கிறது. பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள்" என்று விமர்சித்தார்.
அதிகாரம் இருக்கு: காஷ்மீரில் 3 கட்ட தேர்தலில் 90 சீட்களுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. ஆனால், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, காஷ்மீர் பண்டித்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் (PoJK) அகதிகள் ஆகியோருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய ஐந்து உறுப்பினர்களை நியமிக்க லெப்டினன்ட் கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதன் மூலம் காஷ்மீர் சட்டசபையின் மொத்த எண்ணிக்கை 95 ஆக அதிகரிக்கும். எனவே, பெரும்பான்மைக்கு 48 இடங்கள் தேவை என்ற சூழல் உருவாகும்.
காங்கிரஸ் கருத்து: இந்த 5 எம்எல்ஏக்களும் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்படும் மாநில அமைச்சரவை ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் உள் துறை ஆலோசனையின் கீழ் நியமிக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜக, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications