ஜம்மு காஷ்மீரில் சொல்லியடித்த காம்ரேட்.. தொடர்ந்து ஐந்தாவது முறை அதே தொகுதியில் வெற்றி
ஜம்மு காஷ்மீர்: மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சியை பிடித்துள்ளது. உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பார் என்றும் அறிவித்துவிட்டனர். குல்காம் தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் நிர்வாகி முகமது யூசப் தாரிகாமி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடக்காமல் இருந்தது. இந்தாண்டு தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. முக்கியமாக ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும். இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.
காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும் கூட்டணி அமைத்தது. பாஜக தனித்து களமிறங்கியது. அதேபோல முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கினர். ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 46 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். மொத்தம் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன.
எக்சிட் போல் முடிவுகளில், பெரும்பாலும் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளதாகவே கூறப்பட்டது. அதேபோல தான் தேர்தல் முடிவுகளும் அமைந்தன. தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக இதுவரை ஜம்மு காஷ்மீரில் தனித்து வெற்றி பெற்றது இல்லை.
இதனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணியில் சிபிஎம் கட்சி மூத்த தலைவர் முகமது யூசஃப் தாரிகாமி குல்காம் தொகுதியில் போட்டியிட்டார்.
அவர் ஏற்கனவே இந்த தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு எம்எல்ஏ ஆகியுள்ளார். இதையடுத்து ஐந்தாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டார். குல்காம் தொகுதி காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. காஷ்மீர் தெற்கில் குல்காம் தொகுதி அனைவராலும் உற்று கவனிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தாரிகாமி அந்தத் தொகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இருப்பினும் கடந்த காலங்களை போல இந்தமுறை அவர் எளிதில் வெற்றி பெற முடியாது என நினைத்தனர். காரணம் தரிகாமியை எதிர்த்து, ஜமாத் இ இஸ்லாமியின் சயர் ரேசியை எதிர்த்து போட்டியிட்டார்.
குல்காம் தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும் தாரிகாமி, சயர் ரேசி, மக்கள் ஜனநாயக கட்சியின் நசீர் அகமது ஆகியோருக்கு இடையே தான் பிரதான போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகளில் தாரிகாமி 33,634 வாக்குகளை பெற்றார். சயர் ரேசி 25,000 வாக்குகளை பெற்றார். இதன்மூலம் 7,838 வாக்குகள் வித்தியாசத்தில் தாரிகாமி வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் குல்காம் தொகுதியில் தொடர்ந்து ஐந்தாவது முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications