துண்டு துண்டானதே இந்தியா கூட்டணி! பாஜக அணிக்கு மீண்டும் ஓடும் 'காஷ்மீர் சிங்கம்' பரூக் அப்துல்லா?
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டியிடும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா. மேலும் எதிர்காலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் வாய்ப்புகளை மறுப்பதற்கும் இல்லை என்கிறார் பரூக் அப்துல்லா.
லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடும் என்பது எதிர்பார்ப்பு. லோக்சபா தேர்தலுக்கான பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

ஆனால் இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமாரே இந்த அணியை கை கழுவிவிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓடிவிட்டார். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி சேராமல் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்துவிட்டன. இந்தியா கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் பாஜக தலைமையிலான கூட்டணிக்குப் போய்விட்டது. இதனால் இந்தியா கூட்டணி என்ற அமைப்பு லோக்சபா தேர்தல் வரை நீடிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஶ்ரீநகரில் இன்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, லோக்சபா தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறக் கூடும். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டியிடும். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் "இந்தியா" கூட்டணியின் காங்கிரஸுடனான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால்தான் இம்முடிவை எடுத்தோம் என்றார் பரூக் அப்துல்லா.
அத்துடன் இந்த பேட்டியின் போதே, எதிர்காலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி இடம் பெறக் கூடும் என்பதையும் சூசகமாக தெரிவித்தார் பரூக் அப்துல்லா. வாஜ்பாய் காலத்திலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி இடம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications