இந்த 6 வார்த்தைகளை சொல்லுங்கள்.. தீவிரவாதிகள் சுடும் முன்.. மக்களிடம் சொன்னது என்ன? ஷாக் தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மக்களை அங்கே சுடும் முன்.. இந்துக்களை பார்த்து கலிமா சொல்லும்படி தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர். கலிமா அல்லது ஆறு கல்மாக்கள் என்று அழைக்கப்படும் இந்த வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் பாகிஸ்தான் இஸ்லாமியர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வாக்கியங்கள் ஆகும்.

இது ஆறு மரபுகள் அல்லது ஆறு சொற்றொடர்கள் என்றும் அறியப்படுகிறது. கலிமாக்கள் குழந்தைகளுக்கு எளிதில் மனப்பாடம் செய்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வசதியாக உருவாக்கப்பட்டன. பாகிஸ்தானிய முஸ்லீம் பள்ளிகளில் (மத்ரஸாக்கள்) ஆறு கலிமாக்கள் ஓதப்படுவது கட்டாயமாக உள்ளது. சிலர் பாகிஸ்தானில் இதை கட்டாயம் என்கின்றனர். சிலர் இது குர்ஆனில் இல்லை என்றும் வாதம் வைக்கின்றனர்.
இஸ்லாம், அல்லா மீதான நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும், ஒப்புக்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் முஸ்லீம்களால் "கலிமா" சொல்லப்படுவது வழக்கம். "ஆறு கலிமாக்கள்" என்று அழைக்கப்படும் இந்த சொற்றொடர்கள் இஸ்லாம் மீது நம்பிக்கையை வலுப்படுத்தவும், அல்லாவிடம் மன்னிப்பு தேடவும், அவநம்பிக்கையை நிராகரிக்கவும் முஸ்லிம்களால் ஓதப்படுகின்றன. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று கூறும் பிரகடனம் மிகவும் பிரபலமான கலிமா ஆகும்.
இதை சொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் அங்கே இருந்த சுற்றுலா பயணிகளிடம் கூறி உள்ளனர். அதை சொல்ல திணறிய உடனே அந்த மக்களை தீவிரவாதிகள் சுற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. சிலர் சரியாக சொல்லியும் கூட.. அவர்களை சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
பின்னணி
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழு தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு வழியாக சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் வழிமறித்து மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செல்வார்கள். இந்நிலையில் இன்று மாலை பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொருவரையும் சுடும் முன் அவர்கள் இந்துக்களா என்பதை உறுதி செய்ய கீழாடையை உருவி பார்த்துவிட்டு சுட்டுக்கொன்றுள்ளனர்.
முக்கியமாக சில தாக்குதல்களில் சரியாக குழந்தைகளோடு இருக்கும் கணவன் - மனைவிகளில் , கணவனை மட்டும் குறி பார்த்து சுட்டு உள்ளனர். அதிலும் பெண் ஒருவரை சுடாமல்.. நான் ஏற்கனவே பல பெண்களை சுட்டுவிட்டேன். உன்னை விடுகிறேன். நீ போய் மோடியிடம் இதை சொல் என்று திமிராக பேசி உள்ளனர். சுடப்பட்ட ஆண்கள் எல்லாம் இந்துக்கள் தானா என்பதை உறுதி செய்த பின்பே தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications