தொடர்ந்து கோமா நிலையில் ஜஸ்வந்த சிங்... நேரில் சென்று பார்த்தார் மோடி!
டெல்லி: தலைக்காயம் காரணமாக சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை நேற்று நேரில் சென்று பார்த்தார் பிரதமர் மோடி.
முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நிதி அமைச்சர் பதவி வகித்தவர், ஜஸ்வந்த் சிங் (76). வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சராகவும் பதவி வகித்து உள்ளார். பாஜக தலைவரான அவருக்கு அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விரும்பியத் தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் அனுமதி மறுத்தது. இதைத் தொடர்ந்து அவர் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்தநிலையில், கடந்த வியாழன்று இரவு கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த ஜஸ்வந்த்சிங், உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது ஜஸ்வந்த்சிங் கோமா நிலையில் இருப்பதும், தலையின் பின்பக்கத்தில் அவர் பலத்த காயம் அடைந்து இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருடைய தலை உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதில் காயமடைந்த மண்டையோட்டின் அடிப்பகுதியில் ரத்தம் உறைந்து இருப்பதும், மூளைப்பகுதி வீங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உயிரை காக்கும் அறுவை சிகிச்சையை டாக்டர்கள் உடனடியாக மேற்கொண்டனர். அதற்கான உபகரணங்களும் பொருத்தப்பட்டு அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
ஜஸ்வந்த்சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதை அறிந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் துணைத்தலை ராகுல் காந்தி ஆகியோர் ஜஸ்வந் சிங்கை அனுமதிக்கபட்டுள்ள ராணுவ மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ராணுவ மருத்துவமனைக்கு சென்று ஜஸ்வந்த் சிங்கின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அங்கு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் சிங்கின் உடல் நலம் பற்றி விசாரித்ததுடன் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரின் முக்கிய நாடி துடிப்புகள் சீராக உள்ளன என்றும் ஆனால் அவர் தொடர்ந்து சுய நினைவற்ற நிலையிலேயே இருக்கிறார் என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications