ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஜெயலலிதா வழக்கு தொடர்பான அசையும் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தி.மு.க. எம்.பி. தாமரைக்கண்ணன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜான்குன்ஹா, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தங்கம், வைர நகைகள், வாகனங்கள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஒப்படைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சென்னை ரிசர்வ் வங்கி கருவூலத்தில் இருந்த ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்கள் அனைத்தும் பெங்களூருக்கு அண்மையில் மாற்றப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் பற்றி முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 27ம் தெதி அரசு தரப்பு வழக்கறிஞரிர் வாதம் பற்றி முடிவு செய்யப்படும் என்றும் பெங்களூர் நீதிமன்றம்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications