ஜெ. வழக்கில் கர்நாடக அரசை பிரதிவாதியாக சேர்க்காதது யார் தவறு? ஆச்சாரியா விளக்கம்
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் அரசை பிரதிவாதியாக சேர்த்திருக்க வேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நடைபெற்றபோது, அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார். இவரை வழக்கை நடத்தும் மாநிலமான கர்நாடகா நியமிக்கவில்லை. அன்பழகன் இதை சுட்டிக் காட்டி தொடர்ந்த வழக்கில், 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், பவானிசிங் நியமனத்தை ரத்து செய்தது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில், அரசு வக்கீலை நியமிக்க வேண்டிய கட்டாயம் கர்நாடக அரசுக்கு ஏற்பட்டது. அரசு ஆச்சாரியாவை வழக்கறிஞராக நியமித்தது. அவர் தனது வாதத்தில், அரசு வழக்கறிஞரை நியமிக்காமல் வழக்கை நடத்தியதே தவறு என்று குறிப்பிட்டார்.

குமாரசாமி கண்டிப்பு
ஆனால், நீதிபதி குமாரசாமி, கடந்த 11ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதாவை விடுதலை செய்தார். மேலும், மூன்று மாதங்களாக ஹைகோர்ட்டில் வழக்கு நடப்பது தெரிந்திருந்தும், கர்நாடக அரசு வழக்கறிஞரை நியமனம் செய்யவில்லை. கடைசி நேரத்தில் வந்து விசாரணை நடத்தியதே சரியில்லை என்று சொன்னதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.

மனு செய்யப்பட்டது
இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா தனது கருத்தை தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மேல்முறையீடு நடந்த நேரத்தில், அரசு வக்கீலாக இருந்த பவானிசிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது, அவரை வாதம் செய்ய அனுமதிக்க கூடாது என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்தார்.

பவானிசிங்கே ஒப்புக்கொண்டார்
அப்போது பவானிசிங்கிடம் இதுகுறித்து கேட்டபோது, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் தான் என்னை அரசு வக்கீலாக நியமனம் செய்து கடிதம் கொடுத்துள்ளது. கர்நாடக அரசு நியமனம் செய்யவில்லை என்று நீதிமனஅறத்தில் நீதிபதியிடம் பவானிசிங் கூறியுள்ளார்.

ஹைகோர்ட்டும் சொல்லியது
அன்பழகன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்காத நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரணைக்கேற்ற நீதிபதி பி.குமார் தலைமையிலான அமர்வு, கடந்த பிப்ரவரி 11ம் தேதி வழங்கிய தீர்ப்பில் மேல்முறையீட்டு மனுவில் கர்நாடக அரசை பிரதிவாதியாக சேர்க்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கோர்ட்டே செய்திருக்கலாம்
பொதுவாக கீழ்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு குற்றவாளிகளுக்கு பாதகமாக வரும் பட்சத்தில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்போது, அரசாங்கத்தை பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். ஒருவேளை மனுதாரர்கள் அதை செய்யாமல் தவிர்த்தால், மனுவை விசாரணை நடத்தும் நீதிமன்றம் அரசாங்கத்தை பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். அதற்கான வாய்ப்பு நீதிபதிக்கு சட்டத்தில் தரப்பட்டுள்ளது.

தட்டி கழித்தது ஏனோ?
ஆனால் மேல்முறையீட்டு மனுவை விசாரணை நடத்திய நீதிபதி, கர்நாடக அரசு பிரதிவாதியாக சேர்க்கப்படவில்லை என்பது தெரிந்தும். அரசாங்கத்தை சேர்க்கும் முடிவு எடுக்காமல் தட்டி கழித்துள்ளார். இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications