ஜெ. முதல்வராகும் முன்பு தீர்ப்புக்கு தடை வாங்குங்கள்: கர்நாடக முதல்வருக்கு ராமதாஸ் கடிதம்
பெங்களூரு: ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து கர்நாடக ஹைகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதத்தை பாமக தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மணி சித்தராமையாவிடம் இன்று அளித்தார்.
அந்த கடிதத்தில் ராமதாஸ் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், ஆச்சாரியாவை அரசு வழக்கறிஞராக சிறப்பாக செயல்பட்ட ஆச்சாரியாவுக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற முனைப்பில் ஆச்சாரியா செய்த கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால்தான், ஜெயலலிதாவுக்கு, தண்டனை கிடைக்கும் நிலை உருவானது.

ஆச்சாரியா உழைப்பு வீண்
ஆனால், ஆச்சாரியாவின் அனைத்து கடின உழைப்பையும், கடந்த 11ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வீணாக்கிவிட்டது. ஏனெனில் அந்த தீர்ப்பில், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 8.12 சதவீத அளவுக்கு சொத்து சேர்த்ததால் அவர் விடுதலை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், கடன் தொகையை கூட்டியதில் ஏற்பட்ட தவறால்தான் இவ்வாறு தீர்ப்பு வந்துள்ளது. சரியாக கூட்டினால், வருமானத்துக்கு அதிகமாக 76.75 சதவீத அளவுக்கு சொத்து குவிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

விடுதலை செய்ய முடியாது
கிருஷ்ணானந்த் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு படி வருவாய்க்கு அதிகமாக 10 சதவீதம் வரை சொத்து இருந்தால் தப்பில்லை என்றும், ஆந்திர அரசின் சுற்றறிக்கை படி 20 சதவீதம் வரை சொத்திருந்தால் தவறில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஆனால், கூட்டலை சரியாக போட்டால் வரும் 76.75 சதவீத மதிப்பு அடிப்படையில் ஜெயலலிதாவையோ அவருடன் சேர்ந்தவர்களையோ விடுதலை செய்ய முகாந்திரம் இல்லை.

நீதியை கேலி செய்கிறார்
இது மிகவும் முக்கியமான விஷயம். இந்த குழப்பத்துக்கு நடுவே, ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக முயற்சி செய்கிறார். இது நீதியை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கையாகும். எனவே, இன்னும், நிலைமை மோசமாவதற்குள், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடையை வாங்க வேண்டும்.

நீதியில்லையேல் அமைதியில்லை
தமிழில் பிரபல சொல்லாடல் ஒன்று உள்ளது. நீதியில்லையேல், அமைதியில்லை என்பது அந்த சொல்லாடல். எனவே, நீதியை நிலைநாட்ட கர்நாடக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications