சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் நிறைவு- ஆகஸ்ட் இறுதியில் தீர்ப்பு
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் இறுதி வாதத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் குன்கா, நான்கு முறை கண்டனம் தெரிவித்ததை அடுத்து கடந்த ஜூன் 19ஆம் தேதி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இறுதி வாதத்தை தொடங்கினார்.
கடந்த 24 நாட்களாக இறுதிவாதம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (22ஆம் தேதி) நடைபெற்ற வாதத்தின்போது, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, இந்த வாதத்தை என்றைக்கு முடிக்க இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு குமார், எனது வாதத்தை புதன்கிழமை இறுதி செய்கிறேன் என தெரிவித்தார். அதன்படி இன்று மதியம் தனது வாதத்தை நிறைவு செய்துள்ளார் குமார்.

ஆதரங்களை அடுக்கிய குமார்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பிலான நியாயங்களையும், சொத்துக்கள் வாங்கப்பட்ட விதம், வருமானம் போன்றவைகளை ஆதரங்களுடன் நீதிபதி முன்பு சமர்ப்பித்துள்ளார்.

25 நாட்களில் 85 மணிநேரம்
ஜெயலலிதா மீது 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்க்கப்பட்டதாக புகார் கூறப்பட்ட நிலையில், அக்குற்றச்சாட்டை மறுத்து குமார் 25 நாட்களில் 80 மணி நேரம் வாதாடி இருக்கிறார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
அவர் தனது வாதத்தில், "விசாரணை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது வரை அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்றள்ளது. புலன் விசாரணை அதிகாரி தன்னிச்சையாக செயல்படாமல், அன்றைய ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசின் வழிகாட்டுதலின்படி நடந்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது.

நால்வரையும் விடுவிக்க
இந்த வழக்கில் இருந்து எனது மனுதாரர்கள் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

நெருங்கும் கிளைமேக்ஸ்
ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்ததை ஒட்டி நாளை முதல் சசிகலா தரப்பு இறுதி வாதம் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து இளவரசி, சுதாகரன் தரப்பின் இறுதி வாதம் நடைபெறவுள்ளது. குற்றம் சாட்டப்பட்டோரின் இறுதி வாதத்துடன் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications