ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: ஏப்.29-ல் மீண்டும் விசாரணை
பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் 3 வாரம் தடைவிதித்திருப்பதால், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
அதேசமயம் ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தொடர்புடைய மெடோ அக்ரோ ஃப்ர்ம், லெக்ஸ் பிராப்பர்ட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் மனுக்கள் மீது புதன்கிழமை (ஏப்ரல் 9) முதல் தொடர்ந்து விசாரணை செய்யப்படும் என நீதிபதி டி'குன்ஹா தெரிவித்தார்.
ஜெயலலிதா,அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா நடைபெற்றுவருகிறது.

3 வாரம் சுப்ரீம் கோர்ட் தடை
செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் பேசிய அரசு வழக்கறிஞர் பவானி சிங், அதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு 3 வாரகால இடைக்கால தடைக்கான உத்தரவு நகலை நீதிபதியிடம் அளித்தார்.

ஏப்ரல் 29ல் ஒத்திவைப்பு
அதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்றிலிருந்து அரசு வழக்கறிஞரின் இறுதிவாதம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

பிற வழக்குகள்
தொடர்ந்து பேசிய நீதிபதி டி'குன்ஹா, "பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மெடோ அக்ரோ ஃபார்ம்,லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப்மெண்ட், சைனோரா, ராம்ராஜ் அக்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தொடுத்த மனுக்களின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

சசி வழக்கறிஞர் எதிர்ப்பு
முதல்கட்டமாக மெடோ அக்ரோ நிறுவனம் தங்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது புதன்கிழமை முதல் விசாரணை நடைபெறும்''என்றார். இதற்கு சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

நீதிபதி கண்டிப்பு
இதனை ஏற்க மறுத்த நீதிபதி டி'குன்ஹா,"உச்சநீதிமன்றம் பிரதான வழக்கான சொத்துக் குவிப்பு வழக்கிற்கு மட்டுமே தடைவிதித்துள்ளது. எனவே, மற்றகிளை வழக்குகளை தொடர்ந்து விசாரிப்பேன். அதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது''எனக் கண்டிப்புடன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications