மக்கள் மன்றத்தில் என்னை வீழ்த்த முடியாதவர்கள், பழி தீர்த்து விட்டனர்.. ஜெயலலிதா
பெங்களூர்: பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கீல் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை அறிவித்ததும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசிய பேச்சு விவரம் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி மற்றவர்களுக்கு தலா ரூ. 10 கோடி அபராதம் விதித்தது தனி நீதிமன்றம்.
இதையடுத்து நால்வரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனுக்காகப் போராடிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை அறிவித்து முடித்த பின்னர் ஜெயலலிதா கோர்ட்டில் பேசியுள்ளார். அதுகுறித்த விவரம்...

அரசியலுக்கு வருவதற்கு முன்பே வசதியானவர்
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவர்.

செல்வச் செழிப்பு மிக்க குடும்பப் பெண்
செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து, அந்த காலத்திலேயே திரைப்படங்களில் நடிக்க பல கோடிகளை சம்பளமாகப் பெற்றவர்.

எனக்கென்று குடும்பம் இல்லை
எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை. எந்த குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

ஒரே ஒரே சொத்து மக்கள்தான்
எனக்குள்ள ஒரே சொத்து தமிழக மக்கள் தான். நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கே.

அரசியல்வாதிகளின் பழி தீர்ப்பு இது
மக்கள் மன்றத்தில் என்னை சந்தித்து பகை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள், இந்த வழக்கு மூலம் என்னை பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர், அவ்வளவு தான் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா என தகவல்கள் கூறுகின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications