For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடல்நலம் சரியில்லை: குறைந்தபட்ச தண்டனை அளிக்க நீதிபதியிடம் ஜெ. கோரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: தனக்கு உடல் நலம் சரியில்லாததால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா நீதிபதி குன்ஹாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார்.

Jaya's request to Juge Cunha

இந்நிலையில் ஜெயலலிதா நீதிபதியிடம் கூறுகையில்,

இந்த வழக்கு என்னை அரசியலில் இருந்தே ஒழித்துக் கட்ட செய்யப்பட்ட கூட்டு சதி. மேலும் எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் எனக்கு குறைந்தபட்ச தண்டனை அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடன் ஜெயலலிதாவை பெங்களூர் போலீசார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். இதனால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழப்பதுடன் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
CM Jayalalithaa who is convicted in assets case reportedly requested the judge to reduce her sentence as she is unwell.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X