ராகு காலம் முடிந்ததும் கோர்ட்டுக்குள் வந்தார் ஜெயலலிதா: அதிமுகவினர் மீது தடியடி
பெங்களூர்: ராகு காலம் முடிந்த பிறகு பெங்களூர் கோர்ட்டுக்குள் நுழைந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரை பார்க்க முந்தியடித்து கோர்ட் வளாகத்திற்குள் செல்ல முயன்ற அதிமுகவினர் தடியடி மூலம் விரட்டியடிக்கப்பட்டனர்.
பெங்களூர் எச்.ஏ.எல் ஏர்போர்ட்டிலிருந்து காரில் புறப்பட்ட ஜெயலலிதா மடிவாளா, பொம்மனஹள்ளி, ஹொசரோடு வழியாக பரப்பன அக்ரஹாராவுக்கு காரில் வந்தார்.
ஹொசரோடு என்பது ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அங்கிருந்து இடது புறமாக திரும்பி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பரப்பன அக்ரஹாரா கோர்ட்டுக்கு ஜெயலலிதா காரில் வந்தார்.

இதனிடையே ஹொசா ரோடு முதல், பரப்பன அக்ரஹாரா வரையிலான 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாஸ் இல்லாத யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அதையும் மீறி பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு செல்ல முயன்ற அதிமுகவினரை போலீசார் தடியடி மூலம் விரட்டியடித்தனர். போலீசாரை எதிர்த்து அதிமுகவினர் கோஷமிட்டனர். இதனால் ஒசூர் ரோட்டில் பெரும் பரபரப்பும், டிராபிக் ஜாமும் ஆனது.

பரப்பன அக்ரஹாராவை சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் தூரத்திற்குள் போலீசார் அளித்த பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களும் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. 100 மீட்டர் தூரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டனர்.
ராகுகாலம் காலை 9 மணி முதல் 10.30 மணிவரை இருந்தது. ஜெயலலிதா கோர்ட் வளாகத்திற்குள் வந்தபோது மணி 10.45. எனவே அவர் ராகு காலத்தை கடந்தே கோர்ட்டுக்குள் வந்தார். அவர் ஹொசரோட்டை கடந்தபோது அங்கு குவிந்திருந்த அதிமுகவினர் அம்மா வாழ்க என கோஷமிட்டனர். அவர்களை காருக்குள் இருந்தபடியே பார்த்து கையசைத்தார் ஜெயலலிதா.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications