கட்-அவுட்டுகள், கரை வேட்டி... குட்டி சென்னையாக மாறிய பெங்களூர்: போக்குவரத்தில் கடும் நெரிசல்
பெங்களூர்: தமிழக முதலவர் ஜெயலலிதாவை வரவேற்க பெங்களூர் நகரின் பெரும்பாலான பகுதிகளில் அதிமுகவினர் பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர். அதிமுகவினர் குவிவதால் பெங்களூர்-ஒசூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எச்.ஏ.எல் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பரப்பன அக்ஹாரா பகுதியிலுள்ள கோர்ட்டுக்கு ஜெயலலிதா வருவார் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினர் ஒசூர் சாலையின் பல பகுதிகளில் சாலையின் நடுவே பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர்.

அதில் ஜெயலலிதா போட்டோவுக்கு கீழே அதிமுக நிர்வாகிகள் புகைப்படங்களை பொறித்து, வெற்றி நமதே என்பது போன்ற வார்த்தைகளை இடம் பெறச் செய்துள்ளனர்.
மேலே கன்னடத்திலும், அதற்கு கீழே, தமிழிலும் வாசகங்கள் பொறிக்கப்பட்டு வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதிமுகவினர் அணி அணியாக திரளுவதால் ஒசூர ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இங்குதான் இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்த எலக்ட்ரானிக் சிட்டி உள்ளது. எனவே அங்கு வேலைக்காக செல்லும் ஐடி ஊழியர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழி பிதுங்கினர்.
தமிழக முதல்வர் வருகைக்காக கன்னட மக்கள் அவஸ்தை படுகிறோமே என்று ஆட்டோ டிரைவர்களும், பிறரும் வசை பாடிக்கொண்டே சென்றதை பார்க்க முடிந்தது.
கட்-அவுட், கரைவேட்டி, போன்றவற்றால் பெங்களூர் அதிலும் தெற்கு பெங்களூர் குட்டி சென்னையாக மாறிப்போயுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications