சிறையில் மூன்று நாட்களை கடந்த ஜெயலலிதா: முதல் நாளைவிட மலர்ச்சியாக இருக்கிறார்!!
பெங்களூர்: மூன்று நாட்களாக சிறையிலுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முன்பைவிட தற்போது சற்று மலர்ச்சியாக காணப்படுவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த சனிக்கிழமை முதல், பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள், அதாவது சனிக்கிழமை இரவில், ஜெயலலிதா மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அன்று இரவு அவர் உணவு எதையும் சாப்பிடவில்லை.

மறுநாள் ஓரளவுக்கு சுதாரிப்புடன் காணப்பட்டாலும், சரியாக சாப்பிடாததால் வாயு பிடிப்பு தொல்லையால் அவதிப்பட்டார். ஆனால் நேற்று பிரச்சினையில்லை. காலை முதல் இரவு வரை அளித்த அனைத்து உணவையும் சாப்பிட்டார்.
இந்நிலையில் இன்று ஜெயலலிதா காலையில் 5.30 மணிக்கு எழுந்தார். எழுந்ததும், பால் சாப்பிட்டுவிட்டு, சிறிது நடைப்பயிற்சி மேற்கொண்டார். அதன்பிறகு பொங்கலும், சர்க்கரை சேர்க்காத பாலும் சாப்பிட்டார். 3 தமிழ் பத்திரிகைகளையும், 2 ஆங்கில பத்திரிகைகளையும் அவர் படித்தார். தமிழ் செய்தி சேனல்களில் தமிழக நிலவரத்தை பார்த்தார்.
வழக்கத்தைவிட இன்று ஜெயலலிதா மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டதாக சிறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications