Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: ஜூன் 7ம் தேதி தீர்ப்பு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜூன் 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் பி.குமார் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

அவர் வாதிடுகையில், ‘‘ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சொத்துகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்து, 'சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் மனுக்களை முதலில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். அதன் பிறகே பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் மூல வழக்கான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இறுதி வாதத்தை நிறுத்திவிட்டு உடனடியாக நிறுவனங்களின் சொத்துகளை விடுவிப்பது தொடர்பான மனுவை விசாரிக்க வேண்டும்'' என்றார்.

பவானிசிங் ஆட்சேபம்

பவானிசிங் ஆட்சேபம்

இதனை ஆட்சேபித்த அரசு வழக்கறிஞர் பவானி சிங், "சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணை எங்கு நடந்தாலும் அதில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக ஆஜராகி வாதாடும் அதிகாரம் எங்களுக்கு (அரசு வழக்கறிஞர் பவானி சிங், முருகேஷ் எஸ்.மரடி) மட்டுமே இருக்கிறது.

லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் அரசு தரப்பில் நாங்கள் ஆஜராகவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கு

சொத்துக்குவிப்பு வழக்கு

உச்சநீதிமன்றத்தால் இவ்வழக்கிற்காக நியமிக்கப்பட்ட எங்களுக்கு பதிலாக வேறு வழக்கறிஞர் ஆஜராகி இருக்கிறார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை பொறுத்தவரை விசாரிக்கும் முழு தகுதியும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தை கட்டுப்படுத்த முடியாது''என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி'குன்ஹா, புதிய மனு மீதான தீர்ப்பை மே 7ம் தேதி வழங்குவதாக அறிவித்தார்.

230 சாட்சியங்கள்

230 சாட்சியங்கள்

திங்கள்கிழமை மாலை வரை அரசு வழக்கறிஞர் பவானி சிங் 230 அரசு தரப்பு சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இறுதிவாதம் நிகழ்த்தியுள்ளார்.

மீண்டும் செவ்வாய்க்கிழமை தனது இறுதிவாதத்தை தொடர்ந்து நிகழ்த்துமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி டி'குன்ஹா உத்தரவிட்டார். இன்றும் வாதிடுகிறார் பவானிசிங்.

ஜூன் 7ல் தீர்ப்பு?

ஜூன் 7ல் தீர்ப்பு?

முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மனு செய்துள்ள 10 நிறுவனங்களின் மனுக்களை முதலில் விசாரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்த்து வாதாடிய அரசு வழக்கறிஞர், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பிற்கும், நிறுவனங்களின் வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றார். எனவே, சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறினார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை வரும் ஜூன் மாதம் 7ஆம் தேக்கு ஒத்தி வைத்தார்.

ஆனால், அதற்குள் இன்னும் எத்தனை இழுத்தடிப்பு மனுக்களை ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்வார்களோ தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+