அரசியல் பழிதீர்க்க அரசியல் ஆதாயத்துக்காக வழக்கு தொடர அனுமதிக்கக் கூடாது: நீதிபதி குமாரசாமி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சட்டரீதியான போராட்டம் என்ற போர்வையில் அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் பழியை தீர்த்துக் கொள்ள வழக்கு தொடர்வதை அனுமதிக்கக் கூடாது என்று ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

- சட்டரீதியான போராட்டம் என்ற போர்வையில் அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் பழியை தீர்த்துக் கொள்ள வழக்கு தொடர்வதை அனுமதிக்கக் கூடாது.
- சட்ட நடைமுறைகள், அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைகளுக்கு உள்பட்டு குற்றவாளிகளின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது.
- நியாயமான விசாரணை என்பது குற்றம் சாட்டப்பட்டவரை இருட்டில் வைப்பதல்ல. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விசாரணை அதிகாரி சுதந்திரம் வழங்க வேண்டும்.
- வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாகக் கூறப்படும் கணக்குகளை ஆராய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணை அதிகாரி வாய்ப்பளிக்க வேண்டும்.
- எந்த கால கட்டத்தில் சொத்து குவிக்கப்பட்டது என்பதை தீர்மானிக்க வேண்டும். பொது ஊழியர் ஒருவர், சொத்து குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான காலம் என்ன என்பதை அரசு தரப்பு தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அரசு ஊழியர்களின் வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துக் குவிப்பைக் கணக்கிடும்போது தெரிந்த வருமானத்தின் மொத்தத் தொகையில் 20% கூடுதல் வருமானத்தை அனுமதிக்கலாம் என்று 1989-இல் காவல் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு வழங்கிய வழிகாட்டுதலில் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
- வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து என்பதை வரையறுக்கும் விகிதம் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே தெரிந்த வருமானத்தைக் காட்டிலும் கூடுதலாக உள்ள சொத்துகள் குறித்து சொந்த நிலைப்பாட்டை எடுக்க நீதிமன்றத்துக்கு சுதந்திரம் உள்ளது.
- இந்த வழக்கில் வருமான வரி துறையின் நடவடிக்கைகளை குறைந்தபட்ச ஆதாரமாக விசாரணை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளவில்லை..அதை புறக்கணித்துள்ளது.
- ஜெயலலிதா, சசிகலா, திவாகரன், இளவரசி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப்படுகின்றன.
- தனி நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நான்கு பேரும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications