ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் பதிலளிக்க 6 வார காலம் அவகாசம்: கர்நாடகா, அன்பழகன் தரப்பு மனு
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் கோரி கர்நாடக அரசு மற்றும் அன்பழகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கானது வரும் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில், விசாரணைக்கு வரவிருந்த நிலையில், கர்நாடகம் மற்றும் அன்பழகன் தரப்பு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு தரப்பும்தான், இவ்வழக்கில் எதிர்தரப்பினராக செயல்படுகின்றனர். இந்நிலையில், இவர்கள் தாங்கள் பதிலளிக்க 6 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் வழக்கின் விசாரணையானது மேலும் சில வாரங்கள் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நீதிபதி என்ன முடிவெடுக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தற்போதைய தலைமை நீதிபதி தத்து, வரும் டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார். வழக்கு இழுத்தடிக்கப்பட்டால் அவர் ஓய்வு பெற்ற பிறகு வரும் புதிய தலைமை நீதிபதி மேற்பார்வையில்தான் வழக்கு நடைபெற வேண்டிய நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications