சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா புதிய மனு: வேறு நீதிபதிக்கு மாற்றம்
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டுச்சதி என்ற குற்றச்சாட்டை நீக்க கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்து, வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்துள்ளார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அதில் சொத்துக் குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள கூட்டுச் சதி, ஊன்றுகோல் உள்ளிட்ட பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்ததாகவும், அதன் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தீர்ப்பை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி பணிந்திரா, முன்னதாக வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்ட போது கர்நாடக மாநில சட்டத்துறை செயலாளராக தான் இருந்ததாகவும், வழக்கின் பல கோப்புக்களை தான் கையாண்டு இருப்பதால் வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார்.
மேலும் மனு மீதான விசாரனையை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications