ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நீக்கமா?: நாளை மதியம் 1 மணிக்கு தீர்ப்பு!
டெல்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுகவின் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு நாளை மதியம் 1 மணி 5 நிமிடத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் வெளியாகிறது.
தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது, அரசு தரப்பு வக்கீலாக ஆஜரானவர் பவானிசிங். அந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தார், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும், பவானிசிங்கே அரசு வக்கீலாக ஆஜரானார். ஆனால், கர்நாடக அரசு பவானிசிங்கை ஆஜராகுமாறு ஆணை பிறப்பிக்கவில்லை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறைதான் அந்த ஆணையை கொடுத்தது.
பவானிசிங், குற்றவாளி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டும் திமுகவின் அன்பழகன், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்பு வாதம் கடந்த வாரம் புதன்கிழமை நிறைவடைந்துள்ளது.
ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன், பவானிசிங் ஆஜரானதில் சட்ட விதிமுறை மீறல் இல்லை என்று வாதிட்டார்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி, நீதிபதிகள் மதன்லோகுர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், "பவானிசிங்கை மேல்முறையீட்டு விசாரணையின்போது அரசு வக்கீலாக ஆஜராக கர்நாடக அரசு நியமிக்கவில்லை" என்றார்.
இதைத்தொடர்ந்து வாதிட்ட அன்பழகன் தரப்பு வழக்கறிஞர், அந்தியார்ஜுனா, "பவானிசிங்கை, இந்த வழக்கில் ஆஜராக நியமிக்கவில்லை என்று கர்நாடக அரசே கூறிவிட்டதால், ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங் ஆஜரானது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்துவிட்டது. அதன் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும்வரை, மேல்முறையீட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து, பவானிசிங் வழக்கில், ஏப்ரல் 15ம்தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்ட ஜெயலலிதாவின், மேல்முறையீட்டு வழக்கி்ல் ஏப்ரல் 15ம்தேதிக்குள் தீர்ப்பு வழங்க கூடாது என்றும் தடை விதித்தனர்.
இந்நிலையில், 15ம் தேதியான, நாளை தீர்ப்பு வெளியாகிறது. தீர்ப்பு மதியம், 1 மணி 5 நிமிடத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையொட்டிதான், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி வெளியாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications