ஜெயலலிதா மறைவு.. மரியாதை செலுத்தி ஒத்தி வைக்கப்பட்டது நாடாளுமன்றம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
டெல்லி: தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா காலமானதையடுத்து, அவருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டன.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர், அவர் நேற்று இரவு 11.30 மணிக்கு மரணம் அடைந்தார் என்ற செய்தியை அப்போலோ மருத்துவமனை அறிவித்தது.

இதனையடுத்து, தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்று ஒரு நாள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. இன்று மாலை அவரது உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அப்போது, மறைந்த ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications