ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு! கர்நாடக கோரிக்கை ஏற்பு
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து, கர்நாடக அரசும், திமுகவின் அன்பழகனும் சுப்ரீம்கோர்ட்டில், மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம், கர்நாடக அரசு மற்றும், அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த ஒரு மனுவில், தங்கள் தரப்பு பதிலளிக்க 6 வார காலம் அவகாசம் தர வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள், பி.சி.கோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க கூடுதல் அவகாசம் கோரி, கர்நாடக அரசு மற்றும் அன்பழகன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றம் விசாரணையை அடுத்த மாதம் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
மேலும், 6 வார காலம் அவகாசம் கேட்ட, புகார்தாரர்கள் தரப்பின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது. ஜெயலலிதா வழக்கு தொடர்பான ஆவணங்களை கர்நாடக அரசுக்கு அனுப்பி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications