கச்சத்தீவு மீட்பு வழக்கு: கருணாநிதிக்கு பதில் டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க இருக்கிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததை செல்லாது என அறிவிக்க கோரி முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, ஏகே செல்வராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணை 2020-ம் ஆண்டு நடைபெற்றது. இதன் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து இன்று கச்சத்தீவு வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது கருணாநிதிக்கு பதில், திமுக பொருளாளர் டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை, மத்திய அரசு 1974-ம் ஆண்டு இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தது. இது தொடர்பாக 1974, 1976-ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்ததால் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இந்த நிலையில் இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2008-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல ஏகே செல்வராஜூம் வழக்கு தொடர்ந்தார். பின்னர் மற்றொரு முன்னாள் முதல்வர் கருணாநிதியும் கச்சத்தீவு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை 2009-ம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இதன் பின்னர் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதால் வழக்கை விரைந்து விசாரிக்க கோரி 2012-ல் உச்சநீதிமன்றத்தை நாடினார் ஜெயலலிதா. பின்னர் ஜெயலலிதா மறைந்த நிலையில் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதேநேரத்தில் செல்வராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரிக்கப்பட்டது. அதன் பின்னர் விசாரிக்கப்படாமல் கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்னிலையில் கச்சத்தீவு வழக்கு விசாரணைக்கு வந்தது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, திமுக தலைவராக இருந்த கருணாநிதி தொடர்ந்த வழக்கில் அவர் மறைந்ததால் அவருக்கு பதில் திமுக பொருளாளரான டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications