என் கட்சிக்காரர்களை மிரட்டுபவர்களின் நாக்கை அறுப்பேன்: நிதிஷ் கட்சி எம்.எல்.ஏ. ஆவேசம்
பாட்னா: தன் கட்சிக்காரர்களை யாராவது மிரட்டினால் அவர்களின் நாக்கை அறுப்பேன் என ஐக்கிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. கோபால் மண்டல் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்காச்சியா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஐக்கிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. நரேந்திர குமார் நீரஜ் என்கிற கோபால் மண்டல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
யாராவது என் கட்சி உறுப்பினர்களை மிரட்டினால் அவர்களின் நாக்கை அறுக்க எனக்கு ஒரு நிமிடம் ஆகாது. நான் அடிக்கடி சிறைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன். நான் சிறைக்கு சென்று வந்த பிறகே அரசியல்வாதி ஆனேன்.
நான் முதலில் கோபால் மண்டல் அதன் பிறகே எம்.எல்.ஏ. என்றார்.
கோபால் மண்டலை பார்த்தும் அவர் ஒரு எம்.எல்.ஏ. என அடையாளம் காணாத பட்டோ பண்டிட் என்பவரை தாக்கப் போவதாக அவர் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தான் அவர் நாக்கை அறுப்பேன் என்று பொது நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications