மோடியை ஆதரித்து பேசுவதா? 2 எம்.பிக்களை சஸ்பென்ட் செய்தது ஐக்கிய ஜனதா தளம்!
Subscribe to Oneindia Tamil

பீகார் மாநிலம் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியை சேர்ந்த ஜெய்நாராயண் நிஷாத், பூர்மசி ராம் ஆகிய 2 எம்.பி.க்கள் அண்மைக்காலமாக நரேந்திர மோடியை ஆதரித்துப் பேசி வந்தனர். மேலும் பூர்மசி ராம் எம்.பி, லாலு பிரசாத் யாதவை புகழ்ந்ததுடன் தீவன ஊழல் வழக்கில் பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த இரு எம்.பிக்களும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் 6 ஆண்டுகாலத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
கடந்த வாரம் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் நேரில் சந்தித்த எம்.எல்.ஏ சேதி பஸ்வான், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications