கர்நாடகா தேர்தல்: கிங் மேக்கராகும் ஜேடிஎஸ்? எந்த கட்சியுடன் கைகோர்க்கும்?
கருத்து கணிப்புகள் பெரும்பாலும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக இருக்கும் என்கின்றன.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் என்றே கூறப்படுகிறது.
கர்நாடகாவின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான ஒக்கலிகா கவுடாக்கள் அதிகம் வசிக்கும் பழைய மைசூரு பிராந்தியம்தான் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டை. இப்பகுதியில் மொத்தம் 65 தொகுதிகள் உள்ளன.

இதுவரை காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும்தான் இங்கே கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. பாஜக வலுவாக காலூன்றவும் முயற்சிக்கிறது.
தற்போதைய தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 23-ந் தேதியன்று ஏபிபி சர்வே வெளியானது. அதில் பெரும்பான்மைக்கான 113 இடங்கள் யாருக்கும் கிடைக்காது; 32 முதல் 38 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம்தான் கிங் மேக்கராக திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 40 இடங்கள் கிடைக்கும்; அதுவே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என தெரிவித்திருந்தது. சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; 35 இடங்களைப் கைப்பற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்தான் யாருடைய ஆட்சி என்பதைத் தீர்மானிக்கும் என கூறியிருந்தது.
என்டிவி-என்ஜி மைண்ட்ப்ரேம் கருத்து கணிப்பிலும் தொங்கு சட்டசபைதான். 38 இடங்களைக் கைப்பற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்தான் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் என கூறியிருந்தது. தற்போதைய சிஃபோர் கருத்து கணிப்பு மட்டும்தான் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருக்கிறது. அதேநேரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 29 முதல் 36 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவித்துள்ளது. அனைத்து கருத்து கணிப்புகளுமே ஒன்றை தெளிவாக கூறி வருகின்றன.. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியான குறைந்தது 35 இடங்களைக் கைப்பற்றும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆளும் காங்கிரஸ் அல்லது பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவானால் மதச்சார்பற்ற ஜனதா தளம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.
என்னதான் காங்கிரஸ் கட்சி, பாஜகவின் பி டீம் மதச்சார்பற்ற ஜனதா தளம் என விமர்சித்தாலும் தற்போதைய அரசியல் சூழலில் பாஜக ஆட்சி அமைக்க அக்கட்சி உதவுமா? என்பது கேள்விக் குறி. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க 'நிபந்தனைகளுடன்' மதச்சார்பற்ற ஜனதா தளம் உதவும் என்றே தெரிகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications