கலால் வரி உயர்வு குறித்து ஆராய குழு... ஸ்டிரைக் வாபஸ்... 18 நாட்களுக்குப்பின் நகைக்கடைகள் திறப்பு
டெல்லி: கலால் வரி உயர்வு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
கடந்தமாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2ம் தேதி முதல் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் குதித்தனர் நகைக்கடை உரிமையாளர்கள்.
முதலில் 3 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டம், பின்னர் காலவரையற்றதாக மாறியது. இதனால் தங்க, வெள்ளி ஆபரணங்கள் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

18 நாட்களாக போராட்டம்...
இந்தப் போராட்டத்தையொட்டி தமிழ்நாட்டில் மட்டும் 35,000 நகைக்கடைகள் மூடப்பட்டன. நகைக்கடைகள், உற்பத்தி கூடங்கள் மற்றும் அதில் பணியாற்றும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 18 நாட்களாக இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது.

வர்த்தகம் பாதிப்பு...
இந்த கடையடைப்புப் போராட்டத்தால் இந்தியாவில் ரூ.80,000 கோடி , தமிழகத்தில்ரூ. 6,500 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை...
இந்நிலையில் மத்திய அரசுடன் நகைக் கடை உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கலால் வரி நிர்ணயம் குறித்து ஆய்வு செய்வதற்காக இரண்டு மாதத்துக்குள் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வாபஸ்...
அதனைத் தொடர்ந்து, தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக டெல்லியில் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஸ்ரீதர் நேற்றிரவு அறிவித்தார்.

ஆய்வு குழு...
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கலால் வரி உயர்வு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதனை ஏற்று கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் கடைகள் அனைத்தும் திறக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

நகைக்கடைகள் திறப்பு...
அதன்படி, இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இனி வழக்கம் போல் நகைக்கடைகள் இயங்கும் என சென்னை நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் சல்லானியும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications