ஜார்க்கண்டில் பலிக்காத பாஜக கனவு.. சல்லி சல்லியா நொறுங்கிய பிளான்! பின்னடைவுக்கான காரணம் என்ன?
ராஞ்சி: ஜார்க்கண்டில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவையுள்ள நிலையில், இந்தியா கூட்டணி கூடுதலாக 15 தொகுதிள் என மொத்தம் 56 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்டில் இம்முறை ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்தது. ஆனால், பாஜகவின் எந்த பலனும் கை கொடுக்கவில்லை. இதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்.
81 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு கடந்த 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது. இதனால் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், அடுத்தடுத்த சுற்றுக்களில் நிலமை அப்படியே தலைகீழாக மாறத்தொடங்கியது.

துவக்கத்தில் பாஜக முன்னிலை பெற்றது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுக்களில் பாஜகவிற்கு பலத்த அடி விழுந்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 56 இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை உள்ள நிலையில், இந்தியா கூட்டணி கூடுதலாக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஜார்க்கண்டில் இம்முறை ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்தது. ஆனால், பாஜகவின் எந்த பலனும் கை கொடுக்கவில்லை. குறிப்பாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு பாஜகவே காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஹேமேந்த் சோரன் சிறைக்கு சென்ற நேரத்தில், அவரது நம்பிக்கைக்குரிய சம்பாய் சோரன் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
அமலாக்கத்துறை வழக்கில் ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சம்பாய் சோரன் முதல்வர் நாற்காலியில் இருந்து விலக வைக்கப்பட்டார். இதனால், அதிருப்தி அடைந்த சம்பாய் சோரன் பாஜகவை வளைத்தது. பாஜகவின் வியூகங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்பட்டது. பழங்குடியின மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள சம்பாய் சோரனை கட்சியில் இணைத்து இருப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்பது பாஜகவின் கணக்காக இருந்தது. ஆனால், ஆனால், பாஜகவிற்கு இந்த பிளானும் கை கொடுத்ததாக தெரியவில்லை.
அதேபோல பாஜக தனது தேர்தல் பிரசாரத்தில், வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோத ஊடுருவல்கள் அதிகமாக உள்ளதாக கூறி பிரசாரம் மேற்கொண்டது. பாஜகவின் இந்த பிரசார வியூகமும் அந்த கட்சிக்கு எதிர்பார்த்தத அளவு கை கொடுக்கைவில்லை. இலவசங்களுக்கு எதிராக பேசி வரும் பாஜக, இந்த தேர்தலில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து இருந்தது. ஆனாலும் ஜார்க்கண்டில் பாஜகவிற்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
பாஜகவின் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அந்தகட்சிக்க்கு இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என யாரும் பெரிதாக முன்னிறுத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஹேமந்த் சோரன் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்த நிலையில், பாஜக இந்த விஷயத்தில் கோட்டை விட்டது. இது வாக்காளர்களை பாஜகவால் ஒருங்கிணைக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications