4 மாநிலத்தில் இருந்து ஆள்கள்.. தொகுதிக்கு 1 கோடி.. பாஜக மீது ஜார்கண்ட் முதல்வர் பரபரப்பு புகார்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் சட்டசபை தேர்தலில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். பல்வேறு மாநிலத்தவர்களை களத்தில் இறக்கி, ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ1. கோடி செலவு செய்வதாக புகார் வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு இந்த இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதனால் இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகளில் உள்ளன. இதற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியும், நாளை (நவம்பர் 20 ஆம் தேதியும்) நடக்கவுள்ளது. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சொரன் தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், மற்ற பகுதிகளை போல நம் மாநிலத்திலும் வெறுப்பு அரசியலை விதைத்து பாஜக ஆட்சியமைக்க காய் நகர்த்துகிறது. நம் மாநில கலாச்சாரமும், மக்களும் அவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தை ஏற்க மாட்டார்கள்.
வெறுப்பை பரப்பி தங்களின் அரசியல் அஜான்டாவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என கனவு காண்கிறார்கள். இதைச் செய்வது மிகவும் எளிது. பாஜக அதில் கைத்தேர்ந்த கட்சி. ஆனால் நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன். இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன்.
எனக்கு எதிராக மலிவான அரசியல் செய்யவும், வெறுப்பு பிரச்சாரம் செய்வதற்காகவும் பாஜக ரூ.500 கோடிக்கு மேல் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இங்கிருந்து மட்டுமல்லாமல் பீஹார், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆள்களை அழைத்து வந்து எனக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். மக்கள் வெளியில் வருவதற்கே பயப்படுகிறார்கள். தேர்தல் நடக்கும்போது இங்கு வெளி மாநிலத்தவர்களுக்கு என்ன வேலை. ஒவ்வொரு சாலையிலும் பீஹார், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தவர்கள் தான் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுடன் மக்களாக அமர வைத்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்.இப்படி திரைமறைவில் பல ரகசிய வேலைகளை செய்யும் பல புதிய உக்தியை பாஜக இங்கு கையாள்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ.1 கோடி செலவு செய்துள்ளனர். தாங்கள் செய்த சாதனைகள் குறித்தோ, திட்டங்கள் குறித்தோ அவர்கள் பேச மாட்டார்கள். பொய் சொல்லி மக்களை பயமுறுத்தும் செயல்களில் தான் ஈடுபடுவார்கள்.
அவர்களின் பிரச்சாரத்தில் துளி கூட உண்மை இல்லை. நாங்கள் தேர்தல் பத்திரம் வைத்து யாரிடமும் நிதி பெறவில்லை. அவர்களை போல போலியாக செயல்படவில்லை. எதுவாக இருந்தாலும் நேரடியாக, வெளிப்படையாக, தைரியமாக பேச வேண்டும். நாங்கள் அதைத்தான் செய்கிறோம். ஜார்கண்ட் மண்ணின் மைந்தனாக மக்கள் அறத்தின் பக்கம் நிற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மேலும் அவர் தனது பிரச்சாரத்தில் பாஜகவினர் தேர்தல் களத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ஜார்கண்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஹேமந்தின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications