Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்தரங்க உறுப்பில்.. எஃகு டம்பளரை".. 3 பேரால் சீரழிக்கப்பட்ட 50 வயது பெண் பகீர்

பலாத்காரம் செய்யப்பட்ட 50 வயது பெண் வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: "3 பேர் கொண்ட கும்பல் என்னை கத்தி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்தனர். என்னை விட்டுவிடுமாறு அவர்களிடம் கெஞ்சினேன்.. அவர்கள் கேட்கவில்லை.. பிறகு ஒரு எஃகு டம்பளரை எடுத்து என்னுடைய அந்தரங்க உறுப்பில் திணித்துவிட்டனர்" என்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 50 வயது பெண் வாக்குமூலம் தந்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் சாத்ரா மாவட்டத்தில் உள்ள கோப்னா கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த பெண்.. இவருக்கும் 50 வயதாகிறது கணவனை இழந்த விதவை.. கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு இயற்கை உபாதையை கழிக்க அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றிருக்கிறார்.. ஆனால் மறுநாள் விடியும்வரை வீட்டுக்கு வரவில்லை.

Jharkhand gangrape case widow critical

இதனால் பதறிப்போன உறவினர்கள் அவரை தேடி சென்றபோதுதான், அலங்கோலமாக வயல் வெளியில் விழுந்து கிடப்பதை கண்டனர்.. இடுப்பு பகுதியில் ரத்தம் கசிந்து கொண்டே இருந்திருக்கிறது.. இதையடுத்து, சுகாதார மையத்துக்கு தூக்கி சென்றுள்ளனர்.. ஆனால், அவரது உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்ததால், பீகார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு சொல்லி உள்ளனர்.

அதன்படியே அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.. அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ந்துபோய்விட்டனர்.. அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அவருடைய பிறப்புறுப்பில் எஃகு டம்பளர் திணிக்கப்பட்டிருப்பதையும் கண்டனர்.. இதற்கு பிறகுதான் அவரை ஐசியூவில் மாற்றி தீவிர சிகிச்சை தர ஆரம்பித்தனர்.. போலீசாருக்கும் தகவல் சொன்னார்கள்.

அந்த பெண்ணிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.. அப்போது அவர் சொன்னதாவது: "அன்னைக்கு 10 மணிக்கு வயல்வெளிக்கு இயற்கை உபாதைக்கு சென்றேன்... 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர்.. கத்தி முனையில் மிரட்டி பலாத்காரமும் செய்தனர். என்னை விட்டுவிடுமாறு அவர்களிடம் கெஞ்சினேன்.. அவர்கள் கேட்கவில்லை.. சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர்.

பிறகு ஒரு எஃகு டம்பளரை எடுத்து என்னுடைய அந்தரங்க உறுப்பில் திணித்துவிட்டனர்.. நான் வலி தாங்காமல் கத்தினேன். பிறகு மயங்கி விழுந்துவிட்டேன்" என்றார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.. இந்த கொடூரத்தை செய்த பாப்லு பாஸ்வான், பிட்டு பாஸ்வான் ஆகிய 2 பேர் கைதாகி விட்டனர்.. தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகிறார்கள்.. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து சீரியஸாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+