Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாட்டுக் கறி சாப்பிடுவீங்களா? சீறிய இளைஞர்.. அவரையே அடித்து சாப்பிட வைத்த கும்பல்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தட்டிக்கேட்ட இளைஞரை சரமாரியாக அடித்து உதைத்த கும்பல், அவரது ஆடைகளை கிழித்தெறிந்து அவரையே அரை கிலோ மாட்டுக் கறியை உண்ணச் செய்து சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்க்கண்டில் மாட்டிறைச்சியை ஒருகுறிப்பிட்ட தரப்பினர் அதிக அளவில் உண்டு வருவதாகவும், எனவே மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாட்டிறைச்சி அரசியல்

மாட்டிறைச்சி அரசியல்

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக மாட்டு இறைச்சிக்கு எதிராக அக்கட்சியினரும், வலதுசாரி அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன. இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுக்களை, சிலர் உணவாக உட்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய அவர்கள், மாட்டு இறைச்சி உண்பவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் தொடங்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், வட மாநிலங்களில் மாட்டு இறைச்சியை மையமாக வைத்து மோதல்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், ஜார்க்கண்டில் ஒரு சம்பவம் நேற்று முன்தினம் நடந்திருக்கிறது.

மாட்டு இறைச்சி உண்டதால் கோபம்

மாட்டு இறைச்சி உண்டதால் கோபம்

ஜார்க்கண்ட் மாநிலம் சபிகஞ்ச் மாவட்டம் ராதாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தன் ரவிதாஸ். இவர் புத்தாண்டு தினத்தன்று இரவு அங்குள்ள மதுக்கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சில இளைஞர்கள் மது அருந்தியபடி மாட்டு இறைச்சி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதை பார்த்த ரவிதாஸுக்கு கோபத்தை அடக்க முடியவில்லை. நேராக அவர்களிடம் சென்று, "நாங்கள் தெய்வமாக கருதும் மாட்டிறைச்சியை சாப்பிடுகிறீர்களே.." எனக் கூறி அவர்கள் வைத்திருந்த தட்டுகளை தட்டி விட்டுள்ளார்.

ஆடைகளை கழற்றி தாக்குதல்

ஆடைகளை கழற்றி தாக்குதல்

ரவிதாஸின் இந்த செயலால் பொறுமை இழந்த அந்த கும்பல், அவரை சரமாரியாக அடித்து உதைத்தது. மேலும், அவரது ஆடைகளை கிழித்தெறிந்த அந்த கும்பல், பிறந்த மேனியுடன் ரவிதாஸை அங்கு அமரச் செய்தனர். பின்னர் அரை கிலோ மாட்டு இறைச்சியையும், மதுவையும் வாங்கிய அவர்கள், அதை ரவிதாஸை சாப்பிடுமாறு கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே உருட்டுக்கட்டையால் அவரை அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் பயந்துபோன ரவிதாஸ், அரை கிலோ மாட்டுக்கறியை அழுதுகொண்டே சாப்பிட்டார். இதை அந்த கும்பல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது.

கண்டனம் - புகார்

கண்டனம் - புகார்

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ரவிதாஸை இவ்வாறு சித்ரவதை செய்த கும்பலுக்கு ஜார்க்கண்ட் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ரவிதாஸை அழைத்து வந்து அந்த கும்பலுக்கு எதிராக போலீஸில் பாஜகவினர் புகார் அளிக்க செய்தனர். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், மிதுன் ஷேக் (23), ஜமீருல்லா (24) உள்ளிட்ட 8 பேரை தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+