ஜார்க்கண்ட்: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி உருவ பொம்மையை "கழுவேற்றி" "காலணி" மாலை அணிவித்த சனாதனிகள்!
ராஞ்சி: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மையை "கழுவேற்றி" "காலணி" மாலை அணிவித்து சனாதன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
சனாதனத்தை ஒழிப்போம் என பேசியதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டினால் ரூ10 கோடி பரிசு என உத்தரப்பிரதேச சாமியார் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரூ10 கோடி போதாது எனில் கூடுதலாக ரூ10 கோடி தருவோம் என்றார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையான பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் Hazaribagh என்ற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட சனாதன ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது உதயநிதி படத்தை முக மூடி அணிந்த நபர் ஒருவருக்கு கைவிலங்கு இடப்பட்டு பின்னர் காலணி மாலை அணிவிக்கப்பட்டது.
அதே கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மையை தயார் செய்து அதை கழுவேற்றுவது போல கம்பு ஒன்றில் அவரது உருவ பொம்மையை குத்தி இழுத்து சென்றனர்.
முன்னதாக தமக்கான எதிர்ப்புகள் குறித்து தூத்துக்குடி பொதுக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை பற்றி பேசியதற்காக உத்தர பிரதசேத்தில் ஒரு சாமியார் - பெயர் பரமஹன்ஸ ஆச்சார்யா - என் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்துள்ளார்.

10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், நானே என் தலையை சீவிக்கொள்வேன்.
இதெல்லாம் எங்களுக்கு புதிதல்ல. இப்படித்தான் ஒரு வடநாட்டுச் சாமியார் கருணாநிதியின் தலையை சீவினால் ரூ1 கோடி என்று விலை வைத்தார்.
நானே என் தலையை சீவிக்கொள்ள முடியவில்லை. அவர் வந்து எப்படி சீவுவார் என்று கருணாநிதி கேட்டார். ஆகவே, இந்த மிரட்டுலுக்கெல்லாம் பயப்படுகிறவர்கள் நாங்கள் இல்லை. தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கருணாநிதி பேரன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் பயப்பட மாட்டேன் என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications