ஜார்கண்ட் பள்ளியில் மாணவர்களுக்கு மது விருந்து - ஆபாசப்படமும் காட்டப்பட்டதாகப் புகார்

Subscribe to Oneindia Tamil

கார்வா: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதுபானம் அளிக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் குத்ரம் ஜன்ஜதியே ஆவாசியா வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. குடியிருப்புப் பள்ளியான இங்கு மாணவர்களுக்கு மது விருந்து அளிக்கப்பட்டதை பீப்பிள் யூனியன் பார் சிவில் லிபர்டி என்ற அமைப்பு அம்பலப் படுத்தியுள்ளது.

சமீபத்தில் இப்பள்ளியில் இந்த அமைப்பின் 5 பேர் கொண்ட குழு திடீரென சென்று ஆய்வு செய்து குடி விருந்தை கையும் களவுமாக கண்டுபிடித்தது. மது விருந்துடன், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆபாசப் படத்தையும் காட்டியுள்ளனர். இதற்கு அப்பள்ளியின் கடைநிலை ஊழியர் மகதோ உடந்தை என இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

Jharkhand school serves liquor to students

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக அப்பள்ளியின் முதல்வர் கணேஷ்சிங் முண்டா கூறுகையில், ‘இக்கிராமத்தில் உள்ள அனைவரும், அதாவது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட எல்லாரும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் தான் என நியாயப்படுத்தும் விதமாகத் தெரிவித்துள்ளார்.

பிறந்த குழந்தை முதல் அனைவருமே இக்கிராமத்தில் மதுப் பழக்கம் உடையவர்கள்தானாம். இதில் பரபரப்புக்கு ஏதும் இல்லையே என்றும் அந்த தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

ஆனால், மாணவர்களுக்கு மது வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான புகாரை விரைவில் அரசின் கவனத்திற்கு அனுப்ப உள்ளதாக பீப்பிள் யூனியன் பார் சிவில் லிபர்டி அமைப்புத் தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் உரிய தண்டனைப் பெற்றுத் தரும் வரைப் போராடப் போவதாகவும் அந்த அமைப்பு உறுதிபடக் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+