பீகார் முதல்வர் பேரனை துவைத்தெடுத்த 2 "சரக்கு" வியாபரிகள் கைது
பாட்னா: பீகார் முதல்வரின் பேரனுக்கு தர்ம அடி கொடுத்த மது வியாபாரிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்தின் ராணிப்பூர் கிராமத்தில் இருக்கும் மதுக்கடைகளில் சில தினங்களுக்கு முன் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டு அதே கிராமத்தை சேர்ந்த முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்ஜியின் பேரன் அமித் மாஞ்ஜியின் உத்தரவுப்படி நடத்தப்பட்டதாக மதுக்கடை உரிமையாளர்கள் கருதி உள்ளனர்.

இதையடுத்து, நேற்றிரவு அந்த வழியாக வந்த அமித் மாஞ்ஜியை மதுக்கடை உரிமையாளர்கள் சிலர் கும்பலாக சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கி தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அமித் மாஞ்ஜி, அப்பகுதி போலீசாரிடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்திருக்கிறார்.
அமித் மாஞ்ஜியின் புகாரை பெற்று கொண்ட போலீசார் உடனே களத்தில் இறங்கி நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த ஜெஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மக்தூம்பூர் தொகுதி எம்.எல்.ஏ தான் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்ஜி என்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications