ஜார்க்கண்ட்:புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்பு- ஆளுநர் சிபிஆர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் புதிய முதல்வராக சாம்பாய் சோரன் இன்று பதவியேற்றார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், சாம்பாய் சோரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து கொண்டது. முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை விசாரணைக்காக 10 முறை அழைத்து சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. கடந்த மாதம் 20-ந் தேதி மட்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி இருந்தார் ஹேமந்த் சோரன். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் ஹேமந்த் சோரனிடம் ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் தமது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து உடனடியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இணைந்து சாம்பாய் சோரனை புதிய முதல்வராக பதவியேற்க அழைக்க வேண்டும் என ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக உடனே முடிவெடுக்காதது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
இந்நிலையில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏக்கள் கடிதங்களையும் வீடியோ பதிவுகளையும் கொடுத்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார் சாம்பாய் சோரன். அப்போதும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் எந்த முடிவும் எடுக்காமல் இழுத்தடித்தார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துப் போட்டு புதிய ஆட்சி அமைக்குமோ என்கிற அச்சம் எழுந்தது. இதனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானம் புறப்படவில்லை. இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் ஹைதராபாத் பயணம் ரத்து செய்யப்பட்டது.
#WATCH | JMM vice president Champai Soren takes oath as the Chief Minister of Jharkhand, at the Raj Bhavan in Ranchi.
— ANI (@ANI) February 2, 2024
This comes two days after Hemant Soren's resignation as the CM and his arrest by the ED. pic.twitter.com/WEECELBegr
இந்த பரபரப்புகளுக்கு நடுவே நேற்று நள்ளிரவில் சாம்பாய் சோரனை முதல்வராக பதவியேற்க வருமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் சாம்பாய் சோரன், பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications