For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனிலவு பேச்சு.. பாபா ராம்தேவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

Jodhpur court orders FIR against Baba Ramdev over his 'honeymoon' remark
ஜோத்பூர்: ராகுல் காந்தியை விமர்சிக்கிறேன் என தலித்துகளை காயப்படுத்தும் வகையில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது வழக்குப் பதிவு செய்ய ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தேனிலவுக்கு செல்வது போல் தலித் வீடுகளுக்கு சென்று வருகிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் ராம்தேவ். இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தலித் மக்களை கேவலப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என சில அமைப்புகள் அறிக்கையும் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த விஜய் ராவ் என்பவர், இந்த தேன்நிலவு பேச்சு தொடர்பாக பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜோத்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவை இன்று விசாரித்த மாஜிஸ்திரேட் பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

English summary
A Jodhpur court has ordered police to register a case against yoga guru Baba Ramdev and initiate an inquiry against him for his controversial "honeymoon" remark against Congress vice-president Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X