பாலியல் வழக்கு... சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்காக ஆஜரானார் பாஜக மூத்த தலைவர் சு.சுவாமி !
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமின் வழக்கில் ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பா.ஜ.க.,வின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான சுப்ரமணியன் சுவாமி ஆஜராகி வாதாடினார்.
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள அவரது ஆசிரமத்தில், பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 சிறுமிகள் அளித்த புகாரின் பேரில், கடந்த 2013ம் ஆண்டு ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயும் பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆசாராம் பாபு இதுவரை தாக்கல் செய்த அனைத்து ஜாமின் மனுக்களும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தற்போது வயது முதிர்வு மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ஆசாராம் பாபு மீண்டும் கடந்த மாதம் ஜோத்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணை முடிவடைந்த நிலையில், ஆசாராம் பாபுவின் ஜாமின் மனுவை இன்று தள்ளுபடி செய்து செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்துடன் சேர்த்து 6-வது முறையாக ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆசாராம் ஆஜாராகவில்லை என்றாலும் அவரது ஆதரவாளர்கள் பலர் நீதிமன்றத்தில் குவிந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications