லோக்சபாவில் 2ஜி அறிக்கை தாக்கல்: தி.மு.க வெளிநடப்பு
டெல்லி: மக்களவையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இமாலய ஊழல் எனப்படும், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த ஊழல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்வதற்காக, ஜே.பி.சி., எனப்படும் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
'இந்த ஊழலில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, எந்த தொடர்பும் கிடையாது. தி.மு.க.,வை சேர்ந்த, அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், ராஜா வால், பிரதமர் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளார்' என, ஜே.பி.சி., ஏற்கனவே தன் விசாரணை அறிக்கையில் கூறியுள்ளது. இந்த விசாரணை அறிக்கையை, ஜே.பி.சி., தலைவர், பி.சி.சாக்கோ, கடந்த அக்டோபர் மாதம் லோக்சபா சபாநாயகர் மீரா குமாரிடம் வழங்கினார்.
இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை அறிக்கையை அதன் தலைவர் பி.சி.சாக்கோ இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதனை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
இந்த அறிக்கையை ஒரு மோசடி அறிக்கை என்று பாஜக, இடதுசாரிகள், திரிணாமுல்காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். பின்னர் அவையின் உள்ளே வந்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் சில காகிதங்களை சபாநாயகரின் இருக்கை முன்பு காண்பித்து கூச்சல் எழுப்பினர் இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
எதிர்கட்சிகள் அமளி
இதனிடையே தனி தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் விவகாரம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் மக்களவையில் குரல் எழுப்பினர். முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிய பின்னரும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இதையடுத்து 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது கூச்சல் குழப்பத்திற்கு இடையே மங்கல்யாணை வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மதியம் 2 மணி வரை மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
நாள் முழுவதும் ஒத்திவைப்பு
அவை மீண்டும் தொடங்கியதும் முசாபர்நகரில் நிவாரண முகாமில் குழந்தைகள் இறந்தது தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனை தொடரந்து பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications