ஜெ உள்ளிட்ட நால்வரையும் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார் நீதிபதி குன்ஹா!
பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு மொத்தம் 2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இருவர் பிணையமாக கொடுத்துள்ளனர். இதேபோல மற்ற மூவருக்கும் பிணையம் அளிக்கப்பட்டதால் நால்வரையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட் ஜெ. உட்பட நால்வருக்கும் தலா 2 பேர் பிணையம் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. அதன்படி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற ஆர்டரை ஜெயலலிதா வக்கீல்கள் சமர்ப்பித்தனர். இதையடுத்து ஜாமீன் நடைமுறைகளை நீதிபதி குன்ஹா ஆரம்பித்தார்.

ஜெயலலிதாவுக்காக பரத் மற்றும் குணஜோதி ஆகிய இருவர் பிணையம் அளித்தனர். பெங்களூர் அடுத்த ஜிகனி பகுதியில் சர்வே எண் 442ல் 32 குண்டே (கர்நாடக நில மதிப்பு) நிலம் பரத்துக்கு உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.5 கோடி. ஆனால் அரசு வழிகாட்டு மதிப்பின்படி இது ரூ.1 கோடியாம். இதை நீதிபதியிடம் தெரிவித்தே அவர் பிணையம் அளித்தார்.
குணஜோதி என்பவர் தனது 1 கோடி மதிப்புள்ள நிலத்தை பிணையம் அளித்தார்.குணஜோதி, கர்நாடக அதிமுக செயலாளர் வா.புகழேந்தியின் மனைவியாகும்.
இதையடுத்து பார்மாலிட்டிக்காக சில கேள்விகளை குன்ஹா அவர்களிடம் கேட்டார். மேலும், ஜெயலலிதா தலைமறைவானார் உங்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியும்தானே என்று கேட்டார். ஆம் என்று அவர்கள் கூறியபிறகு பிணையத்தை ஏற்றுக்கொண்டார்.
இதேபோல பெங்களூர் நாராயணப்பா கார்டனை சேர்ந்த லட்சுமிபதி, ராஜு ஆகியோர் சசிகலாவுக்கு பிணையம் அளித்தனர். இளவரசிக்கு ராஜேந்திரன் மற்றும் வா.புகழேந்தி ஆகியோர் பிணையம் அளித்தனர். சுதாகரனுக்கு லோகேஷ், அன்பம்மாள் ஆகிய இருவர் பிணையம் அளித்தனர். ஆக மொத்தம் நால்வருக்குமாக 8 கோடி பிணையமானது.
இதன்பிறகு ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் பிணையம் அளித்தவர்களிடமிருந்து ரூ.1 கோடி பாண்ட் எழுதி வாங்கிக்கொண்டு ஜாமீனில் விடுதலை செய்ய அனுமதிக்குமாறு கோர்ட் ரிஜிஸ்டருக்கு குன்ஹா உத்தரவிட்டார். மேலும், ஜெ. உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்பிடமிருந்தும், தலா ரூ.1 கோடி பாண்ட் எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஜெயில் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்பிறகு கோர்ட் நடைமுறைகளை முடித்துக்கொண்டு அந்த உத்தரவு மத்திய சிறைச்சாலைக்கு செல்லும். அதை சிறை நிர்வாகம் பரிசீலித்து நால்வரையும் மதியம் விடுதலை செய்ய உள்ளது. கோர்ட் மற்றும் சிறை நடுவே சுமார் 20 கிலோமீட்டர் தூரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications