ஆந்திரா என்கவுன்ட்டரில் இருந்து நூல்இழையில் தப்பித்தேன்: 3வது சாட்சியம் பகீர் வாக்குமூலம்
டெல்லி: ஆந்திராவில் நடந்த என்கவுன்ட்டரில் இருந்து தப்பி வந்த தமிழகத்தைச் சேர்ந்த இளங்கோ தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி அம்மாநில போலீசார் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்றனர். அந்த என்கவுன்ட்டரில் இருந்து தப்பித்த 2 பேர் தேசிய மனித உரிமை ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இது திட்டமிட்ட படுகொலை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் என்கவுன்ட்டரில் இருந்து தப்பித்த 3வது நபரான தமிழகத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவரும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆஜரானார். என்கவுன்ட்டர் பற்றி ஆந்திர போலீசார் கூறியது எல்லாம் பொய் என்று அவர் தெரிவித்தார்.
அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

சித்தாள் வேலை
ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள மேலக்காவனூரைச் சேர்ந்தவன் நான். என் ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஆந்திர மாநிலம் நகரியில் சித்தாள் வேலை இருப்பதாகக் கூறி என்னை அழைத்துக் கொண்டு சென்றார்.

நகரி
ஏப்ரல் 6ம் தேதி இரவு 9 மணிக்கு நாங்கள் நகரியை அடைந்தோம். சாப்பிடுவதற்காக ஒரு கடைக்கு சென்றோம். அங்கு இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்ததை பார்த்துவிட்டு ஆட்டோவில் ஏறினோம். ஆனால் எங்கள் ஆட்டோவை ஆயுதம் ஏந்திய போலீசார் தடுத்து நிறுத்தினர்.

வேன்
போலீசார் என்னையும், பன்னீர்செல்வத்தையும் ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் போனில் தெலுங்கில் ஏதோ கூறினார். உடனே ஒரு வேன் வந்தது. அதில் ஏற்கனவே 20 பேர் இருந்தனர். அதில் எங்களையும் ஏற்றிக் கொண்டனர். அதனுடன் ஒரு லாரியில் ஆயுதம் ஏந்திய போலீசாரும் வந்தனர்.

ரேஞ்சர் அலுவலகம்
எங்களை ஏற்றிச் சென்ற வேன் கீழ்திருப்பதியில் உள்ள ரேஞ்சர் அலுவலகம் முன்பு நின்றது. அப்போது லாரியில் இருந்து போலீசார் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர். எங்களை போட்டோ எடுத்தனர். அந்த நேரத்தில் தான் தப்பித்து காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டேன்.

வேலூர்
நான் மலையில் ஏறி, காட்டுப் பகுதிக்குள் 3 மணிநேரமாக மறைந்திருந்தேன். மறுநாள் காலை அந்த வழியாக பைக்கில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு கீழ் திருப்பதிக்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் வேலூர் சென்றேன். அப்போது தான் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி எனக்கு தெரிய வந்தது என்றார் இளங்கோ.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications