கர்நாடகா: வேட்பாளர் மரணத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் 11ல் தேர்தல்

கர்நாடகாவில் ஜெயநகர் தொகுதியின் வேட்பாளர் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் வரும் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கர்நாடகா தொகுதியின் பாஜக வேட்பாளர் மரணம்-வீடியோ

    பெங்களூர்: கர்நாடகத்தில் ஜெயநகர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த பாஜக வேட்பாளர் விஜயகுமார் இறந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு வரும் ஜூன் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    கர்நாடக மாநில தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகளில் 222 மட்டுமே தேர்தல் நடைபெற்றது. ஜெயநகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட பாஜக வேட்பாளர் பி என். விஜயகுமார் மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    June 11 th polling for Jayanagar constituency in Karnataka

    அதுபோல் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அந்த தொகுதிக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு வரும் மே 28-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜேடிஎஸ் கூட்டணி 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதையடுத்து பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். அதையடுத்து முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதிக்கு வரும் ஜூன் 11-ஆம் தேதி நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+