மேற்கு வங்க மனித உரிமை ஆணையர் பதவியிலிருந்து விலகினார் நீதிபதி கங்குலி
டெல்லி: மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெண் பயிற்சி வக்கீலிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீதான புகாரை விசாரித்த உச்சநீதிமன்ற குழுவும், அவர் மீது குற்றம் இருப்பதாக உறுதி செய்தது.

இதையடுத்து அவர் வகித்து வந்த மேற்கு வங்க மனித உரிமை ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக நெருக்கடி அதிகரித்து வந்ததால் பதவி விலகுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தார் கங்குலி.
இந்த நிலையில் அவர் மேற்கு வங்க மாநில ஆளுநரை இன்று நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.முன்னதாக அவர் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொலி சொரப்ஜியிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பதவி விலகுவதுதான் புத்திசாலித்தனம் என்று சொலி சொரப்ஜி கங்குலிக்கு ஆலோசனை கூறியிருந்தார்.
இது குறித்து சொலி சொரப்ஜி மேலும் கூறுகையில், 'நீதிபதி கங்குலி என்னுடன் டெலிபோனில் பேசும்போது, பதவி விலகுவது பற்றி கூறினார். தன்னைப்பற்றி எவ்வளவோ பேசப்படுவதாகவும், தனது கருத்து கேட்கப்படுவதாகவும் அவர் கூறினார். அதற்கு நான், பதவி விலகுவது புத்திசாலித்தனமான முடிவு என்று கூறினேன்' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications