சுப்ரீம்கோர்ட் புதிய தலைமை நீதிபதியாகிறார் டி.எஸ். தாக்கூர்... ஹெச்.எல். தத்து டிச.2- ல் ஓய்வு!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி தத்து ஓய்வுபெறும் நிலையில் புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ். தாக்கூர் பொறுப்பேற்க இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபத் ஹெச்.எல். தத்து, டிசம்பர் 2-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். இதைத் தொடர்ந்து மரபுகளின்படி புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ். தாக்கூரை தத்து பரிந்துரை செய்துள்ளார்.

தலைமை நீதிபதி தத்துவின் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பின்னர் புதிய தலைமை நீதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ். தாக்கூர், 2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
நீதிபதி தாகூரின் பணிக்காலம் இன்னும் ஓராண்டு ஒரு மாதம் இருக்கிறது. அவர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி ஓய்வு பெற உள்ளார்.
டி.எஸ். தாக்கூருக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதி அனில் ஆர். தவே, வரும் 18-ந் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் டி.எஸ். தாக்கூருக்குப் பிறகு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 2017ஆம் ஆண்டு ஜனவரியில் நியமிக்கப்படுவார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications