ஜார்கண்ட் தேர்தல்: டோணி தொகுதியில் பாஜக, காங்கிரஸ் பின்னடைவு
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி வசிக்கும் ஹடியா தொகுதியில் பாஜகவைவிட ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சொந்த மாநிலம்தான் ஜார்கண்ட். அம்மாநில தலைநகரான ராஞ்சியில் ஹட்டியா என்ற சட்டசபை தொகுதியில்தான் டோணி வீடு அமைந்துள்ளது.
ஹட்டியா தொகுதிக்கு கடந்த 9 ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது டோணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்ததால் வாக்களிக்கவில்லை. ஆனால் டோணியின் மனைவி சாக்ஷி வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார்.

இதனிடையே, ஹட்டியா தொகுதியில், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியை சேர்ந்த நவீன் ஜெய்ஸ்வால் 59 ஆயிரம் வாக்குகள் எடுத்து முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பாஜகவை சேர்ந்த சீமா ஷர்மா 35 ஆயிரம் வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். எனவே நவீன் வெற்றி பெறப்போவது உறுதியாகியுள்ளது.
ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் ஜாவீத் அகமது 10 ஆயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் போராடிக் கொண்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அலோக் குமார் தூபே 2 ஆயிரம் வாக்குகள் மட்டுமே எடுத்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுபாஷ் முன்டாவைவிட பின்தங்கியுள்ளார். முன்டா, 5500 வாக்குகளுடன் நான்காவது இடத்திலுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications