Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞர் டிவி வழக்கு: சாட்சிகள் விசாரணை தொடக்கம்! கனிமொழி உள்ளிட்டோருக்கு நீதிபதி 'வார்னிங்'!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி பணம் சட்டவிரோதமாக கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவின் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் நாளை மறுநாள் முதல் தினமும் விசாரணை நடைபெறும் என்பதால் கனிமொழி உள்ளிட்டோர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு பிரதிபலனாக ரூ.214 கோடியை பல்வேறு நிறுவனங்கள் மூலம் கலைஞர் டிவிக்கு அளித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து வாங்கிய பணத்தை கடனாக கணக்கு காட்டி கலைஞர் டிவி திருப்பி அளித்தது.

இந்தப் பணப்பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளது என்பது அமலாக்கப் பிரிவின் வழக்கு. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, ராஜ்யசபா திமுக எம்.பி. கனிமொழி, தயாளு அம்மாள், ஸ்வான் நிறுவனத்தின் ஷாகித் பல்வா உட்பட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்களின் நிர்வாகிகள் என 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

Kalaingar TV case: Day to day hearing to begin from Nov. 19

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இக்குற்றப்பத்திரிகையை ஏற்று அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி ஓ.பி. சைனி பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த முறை விசாரணையின் கனிமொழி உள்ளிட்ட சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கனிமொழியின் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதனால் கனிமொழிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பிக்க இருப்பதாக நீதிபதி சைனி அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பதறியடித்துக் கொண்டு நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழியின் வழக்கறிஞர் மன்னிப்பு கோரியதால் பிடிவாரண்ட் பிறப்பிப்பதை ரத்து செய்தார் நீதிபதி. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடைபெற்றது.

இன்றைய விசாரணையின் போது அமலாக்கப் பிரிவு கூடுதல் இயக்குநர் முதல் நபராக சாட்சியமளித்தார். அவர் தமது சாட்சியத்தின் போது, ஸ்பெக்ட்ரம் மூல வழக்கில் சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில்தான் இந்த வழக்கு தொடரப்பட்டது. கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி சட்டவிரோதமாக, அன்னிய செலாவணி சட்டங்களை மீறி கைமாறியதற்கான முழு ஆதாரங்கள் அமலாக்கப் பிரிவிடம் இருக்கிறது என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனரா? என்று நீதிபதி சைனி கேட்டார். அப்போது ஆ. ராசா மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி சைனி, நாளை மறுநாள் முதல் இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறும். கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார். இதன் பின்னர் வழக்கின் விசாரணை நாளை மறுநாள் நடைபெறும் என்று நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குற்றம்சாட்டப்பட்டோரின் வழக்கறிஞர்களில் ஒருவரான விஜய் அகர்வால், நவம்பர் 19-ந் தேதி முதல் இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்று கூறினார்.

இவ்வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராக ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் தயாளு அம்மாள் தவிர 18 பேரும் நாளை மறுநாள் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+