அகிலேஷ் யாதவைச் சந்தித்த அப்துல்கலாம்... உ.பி.யை ‘தேற்றுவது’ குறித்து ஆலோசனை!
லக்னோ : உத்திரப்பிரதேசம் சென்றுள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது அம்மாநில பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழிகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
கடந்த மாதம் உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவ், தங்களது மாநிலத்திற்கு வருமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிற்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பின் பேரில் உத்திரப்பிரதேசம் சென்றுள்ளார் அப்துல்கலாம்.

அங்கு அகிலேஷ் யாதவைச் சந்தித்த அப்துல்கலாம், அம்மாநில பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய 9 வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உத்திரப்பிரதேச முதல்வருடன் ஆலோசனை நடத்தியது மகிழ்ச்சி' என அப்துல்கலாம் தெரிவித்துள்ளார். அப்துல்கலாமின் இந்த டுவிட்டர் பதிவை அகிலேஷ் யாதவ் ரீடுவீட் செய்துள்ளார்.
அகிலேஷ் யாதவுடன், அப்துல்கலாம் நடத்திய ஆலோசனையில் விவாதிக்கப் பட்ட 9 முக்கிய அம்சங்களாவன:
சுத்தமான குடிநீர், அடுத்த தலைமுறை கிராம தலைவர்கள், உத்திரபிரதேச பயோமாஸ் மற்றும் சோலார் ஆற்றல், இளைஞர்களின் திறமை மேம்பாடு, மாவட்ட மேம்பாட்டு திட்டங்கள், கழிவுலிருந்து ஆற்றல், சமூக தொழில் முனைவோர் மேம்பாடு, மக்களின் பாதுகாப்பு மற்றும் மொபைல் இன்க்ளூசிவ் கவர்னன்ஸ் ஆகியன ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications