திக்விஜய் கல்யாணத்தில் ஆபாச நடனம் ஆடுனா ரூ.1 கோடி.. சன்னி லியோனுக்கு கமால் கான் 'ஆஃபர்'

Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னாள் நீலப்பட நடிகை சன்னி லியோன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் திருமணத்தில் ஆபாச நடனம் ஆடினால் தான் ரூ. 1.கோடி தருவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ள இந்தி நடிகர் கமால் கான் மீது சன்னிலியோன் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் பிரபல நீலப்பட நடிகையான சன்னி லியோன், தற்போது இந்திப்படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் ஜெய்-சுவாதி நடிக்கும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் கடந்த வாரத்தில் சன்னிலியோன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் வெளியாகின. அது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வலைதளப் பக்கத்தில் சன்னி லியோன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பிரச்சினையில் சிக்கினார் கமால்கான். இதற்காக அப்போது அவர் மீது போலீசில் புகார் அளித்தார் சன்னிலியோன்.

இந்நிலையில் மீண்டும் தற்போது சன்னிலியோன் குறித்து பரபரப்பான கருத்து ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கமால்கான்.

சர்ச்சை நாயகன்...

சர்ச்சை நாயகன்...

சமீபத்தில் டிவி பெண் நிருபருடனான தனது காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங். அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்காதலோடு, சன்னி லியோனை இணைத்து கருத்துத் தெரிவித்துள்ளார் சர்ச்சை நாயகன் கமால்கான்.

சன்னிலியோன் சொன்னதாக...

சன்னிலியோன் சொன்னதாக...

இவர் ஏற்கனவே, ‘பலாத்காரம் ஒரு குற்றம் அல்ல. அது ஆச்சரியமளிக்கும் செக்ஸ்' என சன்னிலியோன் சொன்னதாக தனது வலைதள பக்கத்தில் எழுதி பிரச்சினையில் சிக்கினார் கான். இதற்கு எதிராக அப்போது சன்னி லியோன் புகார் அளித்திருந்தார்.

தாழ்மையான வேண்டுகோள்...

தாழ்மையான வேண்டுகோள்...

இந்நிலையில் தற்போது கான் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், ‘திக் விஜய் சிங் ஜிக்கு ஒரு வேண்டுகோள். உங்களது திருமணத்தின்போது சன்னி லியோனின் ஆபாச நடனத்திற்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி நிதியாக அதற்கு நான் ரூ.1 கோடி கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

புகழைக் குறைக்கும் செயல்...

புகழைக் குறைக்கும் செயல்...

இதனைக் கேள்விப்பட்ட சன்னி லியோன் தனது புகழை குறைக்கும் வகையில் டுவிட்டரில் செய்தி வெளியிட்டதாக நடிகர் கமால் ஆர் கான் மீது மீண்டும் போலீசில் புகார் செய்துள்ளார்.

ஓவர் தைரியம்...

ஓவர் தைரியம்...

இது குறித்து சன்னி லியோனின் வழக்கறிஞரான ரிஸ்வான் சித்தீக் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘கானுக்கு எதிராக எப்.ஐ.ஆர். போடப்பட்டாலும், இதனை மீண்டும் செய்திடும் தைரியம் அவருக்கு உள்ளது.

ஆபத்தான விவகாரம்...

ஆபத்தான விவகாரம்...

அவர் மீதான புகாருக்கு போலீசார் நடவடிக்கை எடுப்பது போன்று தெரியவில்லை. இது மிக ஆபத்தான விவகாரமாக உள்ளது. அதனுடன் போலீசார் எந்த முயற்சியும் எடுக்க இயலாத நிலையில் இருப்பதுபோல் தெரிகிறது.

போலீசுக்கு எதிராகவும்...

போலீசுக்கு எதிராகவும்...

போலீசார் தங்களது கடமையை செய்ய தவறினால், அவர்களுக்கு எதிராகவும் புகார் செய்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சூப்பர்ஸ்டாரை விமர்சித்தவர்...

சூப்பர்ஸ்டாரை விமர்சித்தவர்...

சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அசிங்கமானவர் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கியவர் தான் இந்த கமால் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+