ஏடிஎம் டிபார்ட்மெண்ட்டில் இருந்து பேசறேன்னு சொல்லி ரூ40 ஆயிரத்தை ஆட்டைய போட்ட பலே கில்லாடி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: எப்படி எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா... என்பதற்கு உதாரணமாக 'ஏடிஎம்' டிபார்ட்மெண்ட்டில் இருந்து பேசுகிறோம் என சொல்லி மும்பையைச் சேர்ந்த ஒரு கடைக்காரரிடம் உட்கார்ந்த இடத்திலேயே ரூ40 ஆயிரத்தை லவட்டியிருக்கிறான் ஒரு பலே கில்லாடி.

மும்பையைச் சேர்ந்த அலீம் சயீத் ஒரு கடையை நடத்தி வருகிறார். தம்மிடம் உறவினர் ஒருவர் கொடுத்த ரூ40 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்.

Kandivli shop owner conned by ‘ATM department’

இதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களில் சயீத்துக்கு ஒரு போன்கால் வந்தது.. அதில் பேசிய நபர், சென்ட்ரல் பேங்க் ஏ.டி.எம். டிபார்ட்மெண்ட்டில் இருந்து பேசுகிறேன் எனக் கூறியுள்ளார். அத்துடன், உங்க ஏ.எடி.எம். கார்டு வெரிபிகேசனுக்காகத்தான் பேசுறோம்.. இல்லைனா கார்டு காலாவதியாகி விடும் எனவும் பீதியூட்டியுள்ளான் அந்த மர்ம நபர்.

இதனால் அலறிப் போன சயீத் தமது ஏ.டி.எம். கார்டின் பின் நம்பரை கூறியுள்ளார். பின்னர் மீண்டும் போன்செய்த அந்த நபர்.. உங்க கார்டில் ஒன் டைம் பாஸ்வேர்டு வந்திருக்கும்.. அதை சொல்லு என்று கேட்ட அடுத்த சில வினாடிகளில் சயீத்தின் கணக்கில் இருந்து ரூ5 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக மெசேஜ் வந்துள்ளது.. தொடர்ந்து மூன்றரை மணிநேரத்தில் அக்கவுண்ட்டில் இருந்த ஒட்டுமொத்த பணத்தையும் அந்த நபர் அபேஸ் செய்திருக்கிறான்..

பின்னர்தான் தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து போலீசுக்குப் போயிருக்கிறார் சயீத். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி ஒருவனை கைது செய்துள்ளனர். இதில் பெரிய கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்து தொடர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+