கமிஷனர் செய்த சமையல்.. உங்களுக்கு ஏம்ப்பா கண் அங்க போகுது! கடாயில் என்ன இருக்குனு மட்டும் பாருங்க!
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பொரியை வறுத்து அருமையான ஒரு உப்புமா செய்திருந்ததை பார்க்காமல் இந்த நெட்டிசன்கள் கழுகு பார்வையில் எதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள் தெரியுமா.
டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா எனும் சமூகவலைதளங்கள் வந்தவுடன் பிரபலங்கள் சமைப்பது, வீட்டை பராமரிப்பது, நேரத்தை செலவிடுவது உள்ளிட்டவை குறித்தெல்லாம் அவர்கள் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதும் அதை மக்கள் பார்த்து வியந்து போவதும் நடைபெறுகிறது.
அந்த வகையில் நடிகர்கள் சிம்பு, மஹத், நடிகைகள் வனிதா, ஸ்ரீரெட்டி உள்ளிட்டோர் சமையல் செய்யும் படியான வீடியோக்களை ஷேர் செய்துள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி
அது போல் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்சேகர் அண்மையில் சமையலறையில் ஒரு உணவு வகையை செய்து அதன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் அவர் , என்னை வாழ்த்துகள், சமையலில் என்னுடைய அதிர்ஷ்டத்தை முயற்சித்துள்ளேன்.

சிற்றுண்டி
என் மனைவி கொடுத்த வழிகாட்டுதலுக்கேற்ப பொரியை கொண்டு காலை சிற்றுண்டியை தயார் செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார். கடாயில் பொரி உப்புமாவை கிண்டுவது போல் போஸ் கொடுத்துள்ளார். இந்த ட்வீட்டிற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி பதிலளிக்கையில் சமையல் கேஸ் எரிவாயு விலை அதிகமாக உள்ளதால் எங்களால் அதை வாங்கி சமையல் செய்ய முடியவில்லை என்ற வலுவான ஒரு மெசேஜை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதற்கு நன்றி.

விலையேற்றம்
சமையல் கேஸ் எரிவாயு விலையேற்றத்தால் அடுப்பை பற்ற வைப்பதற்கு பதிலாக மக்களின் ஒட்டுமொத்த கோபத்தின் அனலே போதும் என நினைக்கிறீர்கள் போலும் என கிண்டலாக ட்வீட் போட்டுள்ளார். அடுப்பை எப்போ பற்ற வைப்பீர்கள் என்கிறார் ஒரு நெட்டிசன். மேலும் கோட் சூட்டு போட்டுனு யாராவது சமைப்பார்களா என்றும் கேட்கிறார்கள்.

ஹேர்பாட்ஸ்
அடுப்பை ஆஃப் செய்துவிட்டு காதில் ஹேர்பாட்ஸை வைத்துள்ளீர்களே என்கிறார் இன்னொரு நெட்டிசன். ஒரு பொரி உப்புமா செய்து அதை புகைப்படமாக எடுத்து போட்டதற்கு நெட்டிசன்கள் இப்படியா அலப்பறை செய்வாங்க!. கடாயில் என்ன இருக்குனு பாருங்கப்பா.. உங்களுக்கு ஏன் அடுப்பு மேல் கண் போகுது.. அவர் சமைத்து விட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது உணவு கருகி விடக் கூடாது என்பதற்காக அணைத்திருக்கலாம் அல்லவா.. மாத்தி யோசிங்க!
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications